பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைஜன உ ைர 235 ஒருவன் பெருமையுஞ் சிறுமையு மறிகிறவர்களுக்கு வேறே யுபாயங்களிருந்தாலும் அவர்கள் தொழில் தானே போது மென்பது. டு 5.06. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நானார் பழி என்பது சுற்றத்தா ரில்லாதாரைத் தெளிய வேண்டாம்; சுற்றமில்லாதார் உலகத்தோடு பொருந்தார்; பழிக் கஞ்சார் என்றவாறு. உலகத்தார் பழிக்கிறத்தை"த் தவிருகிறதும், விரும்பினதை’ச் செய்கிறதுமாகிய உலகவியற்கை சுற்றமில்லதார்க்கில்லை யாத லின் அவரைத் தெளியப்போகா தென்பதாம். ஆர். 5.07. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதமை யெல்லாந் தரும் என்பது ஒருவன் மேலே தயையே காரணமாக வெண்ணிக்கொண்டு, அறியத்தக்க வற்றை அறியாதாரைத் தெளிந்தால், அந்த ராசாவுக்கு எல்லா வறுமையும் வருமென்றவாறு. தனக்குச் சினேக மானவன் என்று அறிவில்லாதவன் கையிலே உத்தியோகத்தைக் கொடுத்தால், அறிவில்லாதவன் ஆனபடியினாலே, அந்த ராச்சியம் கெடும்; அது கெட்டால் அவனுக்கு மாத்திரமே யல்லாமல் ராசாவுக்கும் கேடுவருமென்ப தாம். Tெ 5.08. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை திரா விடும்பை தரும் என்பது தன்மேலே பட்சமில்லாதவனைப் பிறப்பு முதலான வற்றாலும் செய்கையாலும் தெளிந்த அரசனுக்கு, அந்தத் தெளிவு, தன் வம்ச பரம்பரையினும் நீங்காத் துக்கத்தைக் கொடுக்கு மென்ற வாறு . 1. பழிக்கிறதை 2. விரும்பினதை