பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 6 திருக்குறள் ஆனபடியினாலே சினேகமும் தெளிவும் இரண்டு வகையும் வேண்டு மென்பது. அ 509. தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் என்பது எவர்களையும் ஆராயாமற் றெளிய வேண்டாம்; ஆராய்ந்து தெளிந்த பிறகு அவர்கள் பேரிலே சந்தேகம் வேண்டா மென்ற வாறு. தெளிந்த பிறகு சந்தேகப்பட்டால் தீராத குற்றம் வருமென்ப தா.ம. சிக 510. தேரான் தெளிவுந் தெளிந்தான்.க ணையுறவுந் தீரா விடும்பை தரும் என்பது ஒருவனை யாராயாது தெளிதலும், ஆராய்ந்தவனைச் சந்தேகப் படுகிறதும், இந்த விரண்டுந் தீராதகுற்றங்களைக் கொடுக்கு மென்றவாறு தெளிந்து உத்தியோகத்தைக் கொடுத்த பிறகு ஒரு குற்றமுங் காணாமல் ஐயுறவு' பட்டால், அந்த ஐ யுறவை? அவனறிந்து இனி இந்த உத்தியோகம் நில்லாதென் றிகழ்ந்து விடுவன்; அதுவு மல்லாமற் பகைவராலே யெளியதாய்ப் பிரிக்கப்படும்; அவர் பிரிந்தால் பகைவரை வெல்லப்போகாது. ஆனபடியினாலே தெளிந்தவனிடத்திலே சந்தேகமாகா தென்பதாயிற்று. ίύ ஆக அதிகாரம் டுல்கக்குக் குறள் டுளt). இப்பால் 52. தெரிந்து வினையாடல் என்பது இப்படித் தெளியப் பட்டவர்களை யவர்கள் செயலை யுங் காரியங்களையு மறிந்து ஆளவேணுமென்பது. 1. அய்யிரவு 2. அய்யிரவை எள்று சுவடியில் உள்ளது 1. செய்ய வல்ல என்பது அச்சு நூல்.