பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 திருக்குறள் காமையும், உத்தியோகத்திலே தன் கையிலே வந்த பொருள்மே லாசையுறாமையும் ஆகிய இந்த நாலு குண ங்களையுங் கெட்டி யாக வுடையவன் மேலே ராச்சிய பாரத்தை விட்டு இருக்கலாகு மென்றவாறு. இந்த நாலு குணங்களுமுடையான் செய்கிற காரியத்தை யாராய வேண்டா மென்றவாறு /Fa - 514. எனைவகையாற் றேறியக் கண்ணும் வினை வகையான் வேறாகு மாந்தர் பலர். என்பது எல்லா வகையானு மாராய்ந்து தெளிந்து ராச்சிய பாரத்தை வைத்த பிறகு அந்த ராச்சியத்தினுடைய வாசையினாலே வேறே நினைவாய்க் குணங்கெட்டுப் போறவர்கள். அனேகம் பேருண் டென்றவாறு கட்டியங்காரனைப் போல்’ ராச்சிய பார ஆசை யினாலே ராசாவைக் கொன்று கெட்டுப் போனார் பலர்; ஆன படியினாலே முதற் கண் கொஞ்சமான உத்தியோகத்தைக் கொடுத்து அதனாலே தெரிந்து கொள்ள வேணுமென்ற வாறு . P 515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று என்பது ஒருவன் குணங்களை யாராய்ந்தறிந்து, செய்கிற காரியங் களுடைய இடையூறுகளையு மாராய்ந்து. செய்யவேணு மல்லா மல், இவன் நம்முடைய பேரிலே அன்புடையவனென்று காரியங் களைச் செய்யச் சொல்லப் போகா தென்றவாறு. அறிவினாலே யல்லாம லன்பினாலே செய்து முடியா தென் பதாம். டு ,16. செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் என்பது 1. போகிறவர்கள் 2 சீவக சிந்தாமணி நாமக ளிலம்பகம் காண்க