பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 23.9 செய்கிறவனை முதற்கண் ஆராய்ந்தறிந்து செய்யப்பட்ட காரி யத்தை அதன்பின் னாராய்ந்தறிந்து, பிறகு இந்தவிரண்டினை யுங் காலபக்குவத்தோடே யாராய்ந்து, இயன்றதாகிற் செய்க வென்றவாறு. செய்கிறவன் லட்சணங்களையும் காரியத்தினுடையலட் சணமுமினிமேற் சொல்லுகிறோம்.' காலத்தோடெய்த வுணர்தலாவது, இந்தக்காலத்திலேயிந்த லட்சணங்களுடையான் இந்தக் காரியஞ் செய்தால் முடியு மென் றறிகிறது. அச 517. இதனை யிதனா லிவன் முடிக்கு மென்றாய்ந் ததனை யவனகண் விடல் என்பது இந்தக் காரியத்தை யிந்த வகையா லிவன் முடிக்க வல்லவ னென்றாராய்ந்து, மூன்றுவகை யு மொத்ததானால், அந்தக் காரி யத்தை யவன் மேலே விடலா மென்றவாறு. அவன் கண் விடுகிறது அந்தக் காரியத்துக்கு அவனைக் கர்த்தனாகப் பண்ணுதல் لئے۔/ 518. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற்குரிய னாகச் செயல் 1. என்பது ஒருவனைத் தன் காரியஞ் செய்தற்குரியவனாக வாராய்ந்து துணிந்தால், பிறகு அவனைக் காரியஞ் செய்கிறத்துக்குரியனாம் படி பெருமை பெறச் செய்க வென்றவாறு. பெருமை பெறச் செய்கிறதாவது, அந்தக் காரியஞ் செய் கிறதுக்கு வேண்டியது கொடுத்தல்; அதில்லாத வழி முடியா தென்பதாம். (a T

  • I . "'மேற் சொல்லப்பட்டன’’ என்றிருத்தல் தரும், பரிமேலழகருரை காண்க: செய்வானது இலக்கணம் இவ்வதிகாரத்து முதல் மூன்று குறள்களிலும் வினையியல்பு ஐந்தாவது குறள்களிலும் கூறப்பட்டன.