பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருக்குறள் 519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு என்பது எப்பொழுதுந் தன்காரியத்திலே முயற்சியுடையான் , அந்தக் காரியத்தினாலே தனக்குறவா யிருக்கிறவர்களைக் கண்டு பொறாதபேர் சொல்லுகிறதை’க் கேட்டு, வேறாக நினைத்தால் லட்சுமி யவனை விட்டுப்போ மென்றவாறு. உறவாயிருக்கிறதாவது, அவனுக்கு வேண்டிய கருமங்க ைள யெல்லாஞ் செய்தல். அப்படிப் பட்டவன் மேலே அனுமானப் பட்டாற் பின்னை யொருவருமுளப் பட்டு நிற்பாரின்மையின் தன் செல்வங் கெடு மென்பதாயிற்று. متكي 520 நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு என்பது உத்தியோகம் பண்ணுகிறவன் பொல்லாதவனல்லாவிட்டால் உலகமும் பொல்லாதது ஆகாது; ஆனபடியினாலே அரசன் காரி யம் செய்கிறவனைத் தினமு மாராய வேணு மென்றவாறு. அவனை மாத்திர மாராய்ந்தால் அவன் வசமாயிருக்கப்பட்ட ராச்சிய மெல்லாம் ஆராய்ந்தாற் போலேயாம். இப்படி ஆராய்ந் தால் வினை செய்கிறவன் தன்னுரிமை யழியாமல் ஆராய்ந்து ஒழுகுக என்பதாம். μD ஆக அதிகாரம் டுல்உக்குக்குறள் டுளஉ0 இப்பால் 53. சுற்றந்தழால் என்பது, ஒருவன் தன் சுற்றத்தாரைத் தன்னைவிட்டு நீங்கா மல் அணைத்தல். 1. செய்கிறதற் 2. சொல்லுகிறதைக் 1. அனுமானம்-சந்தேகம்