பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24, 2 திருக்குறள் 52.4. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் என்பது செல்வம் பெற்றதனாலே யொருவன் பெற்ற பலனாவது, தன் சுற்றத்தார் தன்னைச் சூழப்படும் வகை செய்த லென் alЈ Гт III . தன் செல்வம் பலர்க்கும் பயன்பட்டால், இம்மையிலே கீர்த்தியும் மறுமையிலே அதிகப் போகமும் உண்டென்பது, 525. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும் என்பது ஒருவன் சுற்றத்தார்க்கு வேண்டியது கொடுத்தலும் நல்ல வசனங்கள் சொல்லுதலு முடையனாகில். பலவகைச் சுற்றங்களு மவனைத் தாங்களே சூழ்ந்துகொள்ளுவார்க ளென்றவாறு. இந்த வுபாயங்களை வடநூலார் தானமு சாமமு மென்பர். டு 526. பெருங்கொடையான் பேனான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில் என்பது ஒருவன் மிகுத்த கொடையையு முடையவனாய்க் கோபத்தை விரும்பாதவனு மானால் அவனைப் போலச் சுற்ற முடையவர்க ளிந்த வுலகத்திலே யில்லை யென்றவாறு. மிகுத்த கொடையாவது, ஒருவன் வேண்டினதெல்லாம் ஒருவகை யாலுங் குறை படாமற் கொடுக்கிறது. அள் 528. காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு மன்ன நீ ரார்க்கே யுள என்பது =