பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 24 & காக்கை தனக்கு இரை கண்டால் அத்தை'த்தான் மாத்திரந் தின்னாமல் தன்னினத்தை யழைத்து அதனோடே கூட உண் ணும். நல்ல சுற்றத்தை யுடையவன் செல்வமு மப்படிப் பலருடன் கூட வுண்ணப் படுமென்றவாறு. அப்படி யுண்டவனுக்குப் பகையில்லாமற் பெருஞ்செல்வமு மெய்துமென்பது. திT 528. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி னதுநோக்கி வாழ்வார் பலர் என்பது எல்லாரையு மொரு சரியாய்ப் பாராமல் அவரவர்கள் மரியாதி' யறிந்து நடப்பித்தா லதைக்கண்டு அவனை விடாமல் வாழப் பட்ட சுற்றத்தார் பலரென்றவாறு. எல்லாரையுஞ் சரியாய்ப் பார்த்தாற் பெரியவர்கள் விட்டுப் போவார்கள ஆனபடியினாலே அவரவர்கள் மரியாதி யறிந்து நடப்பிக்க வேணு மென்பதாம். تے۔H 529. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும் என்பது முன்பு தன்னோடு சுற்றமா யிருந்து, பின்பு யாதானு மொரு காரணத்தினாலே தன்னைவிட்டுப் பிரிந்துபோனவர்கள் திரும்ப வந்து உறவாயிருக்கிறது, தன்னிடத்திலே குற்றமில்லா விட்டா லென்றவாறு. முன்பு முற்றமுண்டாயிருந்த படியினாலே விட்டுப்பிரிந்தார். குற்றமாவது, நெறியல்லாத காரியங்களைச் செய்தல், வெறுக் கத் தக்க வசனங்களைச் சொல்லுதலென்பது. இந்தக்குற்ற மில்லாவிட்டாற்றாமே வந்து சேருவ ரென்பதாம். I . அதனை 1. மரியாதை 2. வாழும். 3. ஒருதன்மைராக