பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருக்குறள் 530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தாளை வேந்த னிழைத்திருந் தெண்ணிக் கொளல் என்பது ஒரு காரண மில்லாமற் றன்னிடத்திலேயிருந்து விட்டுப்போன வன், பின்பு ஒரு காரணத்தாலே திரும்பி வந்து தன்னைச் சேர்ந்தால், அவன் வந்த காரியத்தைச் செய்து, பிறகு ஆராய்ந்து, குற்றமில்லா விட்டா லவனுடனே சினேகம் பண்ணவேணும் என்றவாறு. அவன்வந்தவுடனே ஆதரியா விட்டால், பகைவருடனே கூடி உபத்திரவம் பண்ணுவான் என்றவாறு. Ꭷ ஆக அதிகாரம் டுல்கூக்குக் குறள் டுள கூல் இப்பால் 54. பொச்சாவாமை என்பது, தன்னுடைய ரூபமுஞ் செல்வமும் பலமும் இது முதலானதுகளை"க்கண்டு மகிழ்ந்து தன்னைக் காத்துக் கொள்ளு கிறதும் பகைவரை யழித்தது முதலாகிய காரியங்களைச், சோர்தலைச் செய்யாமலிருக்கிறது. 531. இறந்த வெகுளியிற் றிதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு என்பது மிகுத்த சந்தோஷ மகிட்சி'யினாலே வந்த மறப்பு அளவில் லாத கோபத்தினும் பொல்லாத தென்றவாறு. மிக்க சந்தோஷமாவது, பெருஞ் செல்வத்தாலும் பெரிய இன்பத்தாலும் வருவது; அதனால் வந்த மறப்புத் தனக்குக் கேடு விளைவிக்குமென்பதாம். அடு 1. யில்லாத என்று காகிதச் சுவடியிலும் அச்சுநூலிலும் உள்ளது த. ரவிற் கண்டது 3. இவை முதலியவற்றை 4. காரியங்களில் என்பது அச்சுநூல். 1. மகிழ்ச்சி