பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

23

— என்ற பாடலில் ‘உலகம்’ பற்றிய ஜைந சமயக் கருத்தை மறுத்துக் கூறுவதாகக்குறள் 1062 உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜைநசமய வேதம்; ஜீவ புத்கல முதலான ஷட்திரவியங்கள் நிறைந்தது லோகமென்றும், லோகமானது ஒருவரால் சிருஷ்டிக்கப் பட்டதல்ல என்றும், அநாதியாகவுள்ளது என்றும் கூறும். (தி.ஆ.பக் 192) ஆகவே உலகம் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டதன்று என்பது ஜைந சமயக் கொள்கையாகும் என அறியப்பெறும். எனினும், “உலகியற்றியான்” என்றகுறளிலிருப்பது, ஜைந சித்தாந்தத்துக்கு முரண் செய்வதன்று. உலகியற்றல் என்பது சைவத்துக்கும் ஜைநத்துக்கும் பொதுவாக நிற்பது. முறைப்பாட்டில் இரண்டிற்கும் வேறுபாடுண்டு. விருஷபதேவர் உயிர்கட்குத் தொழில் முதலியவறறை ஒழுங்குபட இயற்றினார் என்று ஜைநநூல்கள் கூறுகின்றன. உலகியற்றுதல் என்பது உலகில் பல தொழில்களை நியமித்தலாகும். அத்தொழில்களைச் செய்தால் இரத்தல் வேண்டாததொன்று. ஆகவே உலகியற்றியான் என்பது ஜைநசமயக் கோட்பாட்டின்படி அமைந்ததாதல் கண்டுகொள்ளலாம் என்பர் திரு. வி. க (தி. ஆ. முன்னுரை.)

உலகில் ஒருவன் உயிர்வாழ்தற்கு இரத்தலே வழி என்பதும் பொருந்தாது. மக்கள் தமக்கென விதிக்கப்பட்ட உழவு, வாணிபம் முதலிய ஷட் கர்மங்களைச் செய்து உயிர்வாழலாம். அங்ஙனம் செய்யாமல் இரத்தல் தமக்குத்தாமே உண்டாக்கிக் கொண்ட செயலாம். எனவே, ஏழ்மையும் அதனான் இரத்தலும் மனிதன் தானே உண்டாக்கிக் கொண்டதேயன்றி, வேறொருவர் உண்டாக்கியதன்று. ஆகவே உலகத்தில் இரத்தல் தொழிலை தன் சோம்பலால் கொண்டவன் (உலகின் கண் இயற்றியவன் — உண்டாக்கிக் கொண்டவன்) யான் — அவன் அழிக என்பதே இக்குறட் கருத்தாகும்.

“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
 பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” ( 134)

— எனும் குறள் வேதம் ஓதுதலும் பிறப் பொழுக்கமும் பற்றிக் கூறும். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்ற தொல்