பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 249 543. அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் என்பது அந்தணருக் குரித்தான வேதத்திற்கும் அந்தவேதத்தினாலே சொல்லப்பட்ட தர்மத்திற்குங் காரணமாய் நின்றது மன்னவன் செங்கோலாகிய நீதி யென்றவாறு. ராசா நீதியாய் நடத்தினால் வேதமும் தர்மமும் வர்த்திக்கு மென்றவாறு. MHL 544. குடிதழிஇக் கோலோச்சு மாநில ம ன் ன னடிதழிஇ நிற்கு முலகு என்பது தன்னாட்டிலே யிருக்கிற குடிகளையும் ரட்சிச்சுக் கொண்டு செங்கோலை முறைமை தப்பாமல் நடத்தப்பட்ட ராசாவை யுலகத்தார் விடாம லிருப்பாாக ளென்றவாறு. ரட்சிக்கிறதாவது நல்லவசனஞ் சொல்லுதலும் வறுமை யானபோது வேண்டுவன கொடுத்தலுமாம். تنفي 545. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு என்பது முறைமை தப்பாமல் நடத்தப்பட்ட" மன்னவனாட்டிலே மழையும் விளைவும் நிறைந்திருக்குமென்றவாறு. அரசன் செங்கோலனானால் அவனாட்டிலே யெல்லாச் செல்வங்களு முண்டென்றவாறு. டு 546. வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலது உங் கோடா தெனின் என்பது 2. நடத்தும்