பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருக்குறள் ராசாவுக்குச் சண்டையிலே செயத்தைக் கொடுக்கிறது. அவனாலே யெறியப்பட்ட வேல்வாளிதுகளல்ல. அவனடத்தப் பட்ட" செங்கோல் முறைமை யென்றவாறு. அரசன் நீதியாய் நடந்தால் அவன் சத்துருக்கள் தானே கெடுவ ரென்பதாம். அன் 547. இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கு முட்டாச் செயின் என்பது * பூமியை யெல்லாம் ராசா காப்பன்; ராசாவையவன் செங் கோல் காக்கும்'; அந்தச் செங்கோல் கோணாமல் நடந்தாலென்ற வாறு. செங்கோல் கோணாதாவது, நீதிமுறைமையாய் நடக்க வேணு மென்பதாம். Q/T 548. எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் றண்பதத்தான் தானே கெடும் என்பது -- முறையிடுபவர்களுக்கு எளியவனாய், அவர்கள் சொன் னத்தை"க்கேட்டு நீதிமான்கள் பலரோடு மாராய்ந்து, அதற் கேற்கச் செய்யாத வரசன், தாழ்ந்த விடத்திலே நின்று தானே கெடு மென்றவாறு. தாழ்ந்த விடமாவது முறையிடுபவர்கள் காணாதவிட மென்பதாம். طے{ 549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில் என்பது 1. வாளிவைகளல்ல 2. அவனடத்தும், 3. பகைவர் 4. காற்பன்: 5. காற்கும் என்று காகிதச் சுவடியிலுள்ளது 6. சொன் னதை 7. குறிப்புரைகாண்க