பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.4 திருக்குறள் அரசன் நீதி முறைமை தப்பி நடந்தால் அவன் நாட்டிலே யிருக் கிற குடிகளுக் கென்றவாறு. மழையில்லாத போது பசியாலும் வெய்யிலினாலும் வருந்து கிறாப் போலே அரசன் நீதியாய் நடத்தா விட்டாற் குடிகளுக் கெல்லாத்துக்க முண்டா மென்றவாறு. GT 558. இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் என்பது நீதி முறைமையாய் நடவாத ராசாவின் கீழே வாழ்கிற குடிகளுக்குத் தரித்திரத்திலும் பொல்லாதது அயர்சுவரிய முண்டா யிருக்கிற தென்றவாறு. அரசன் றனக்குரித்தான வரிப்பணத்தை வாங்கிக் கொண் டிராமற் பின்னையும் பொருளை விரும்பி முறை தப்ப நடந்தாற் றெண்டனை முதலாகிய வுபத்திரவம் வருகிறது பொருளுடைய வர்களுக்கான படியினாலே யாதலாற்’ செல்வம் பொல்லா தென்பதாயிற்று. تھی۔ 559. முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல் என்பது மன்னவன் றான் செய்யப்பட்ட காரியங்களை முறைதப்பச் செய்தால், அவன் நாட்டிலே மேகங்கள் பக்குவத்துக்கு மழை பெய்யா தென்றவாறு. பக்குவத்துக்கு மழையில்லா விட்டாற் சகலதுக்கமு முண் டாம். EF 560. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் என்பது 1. வருந்துகிறாற்போலே 2. யாதலாற்-இது வேண்டாத சொல் 3. பருவத்திற்கு-பெய்யுங்காலத்தில்