பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை -- 25 I ஒருவன் கண்ணுக்கு ஆபரணமாவது கண்ணோட்டம்: அந்தக் கண்ணோட்ட மில்லாவிட்டால் அந்தக் கண்கள் அறிவு டையவர்களாலே புண்ணென்று சொல்லப்படுமென்றவாறு. டு 576. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் னோடா தவர் என்பது ஒடுதற்குரிய கண்ணோட்ட மில்லாதவர்கள் நடந்து திரிந் தாலும் மண்ணோடே பொருந்தி நிற்கிற மரத்துக்குச் சரி யென்ற வாறு மனுஷனுக்குத் தயையில்லாவிட்டால் மரத்தோடொப்ப ரென் பதாம். சின் 577. கண்ணோட்ட மில்ல வர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில் என்பது கண்ணோட்ட மில்லாதவர் கண்ணு ண்டாயிருந்தாலும் கண்ணுடையவர்களல்லர்: கண்ணுடையவர் கண்ணோட்ட மில் லாம லிருக்கிறதுமில்லை யென்றவாறு. கண்ணுடையவர்கள் ஆனதற்கு லட்சணம் காட்சிக்கண் உண்டாகவேனு மென்பதாம். "Τ 578. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்தில் வுலகு என்பது h முறைசெய லாகிய தங்கள் தொழில் அழியாமற் கண்ணோட வல்ல வேந்தர்களுக்கு உரிமை உடையது இவ்வுலக மென்ற வாறு. ராசாக்களுடனே சினேகமான பேர் பிறரை வாதைப்படுத்தி னால் அவர்கள் பேரிலே பட்சம் வையாமல் தண்டித்தலும், 1. ஆணத்திற்கு என்று காகிதச்சுவடியிலுள்ளது.