பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 269 தம் பெருமையை நிலை நிறுத்துவ ரென்றவாறு. தாங்கள் நினைத்த கருமத்துக்கு விக்கினங்கள் வந்தாலும் அறிவுடையார் அவற்றைப் பரிகரித்து முடிப்பரென்பதாம். Кат" 598. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு என்பது ஊக்க மில்லாதவர்கள் இந்த வுலகத்தாருக்குள்ளே நாம் வண்மை யுடையோமென்று தம்மைத் தாம் மதித்தலைப் பெறா ரென்றவாறு. ஊக்க மில்லா விட்டால் முயற்சி பொருள் கொடை செருக்கு இதுகள்' முறையே யில்லாமற் போம்; இவை யில்லா விட்டால் சந்தோஷ மில்லை யென்பது. لیگی۔ 59.9. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெருவும் புலிதாக் குறின் என்பது எல்லா மிருகத்துக்குள்ளேயும் பெரியது யானை: அது கூர்மையான கொம்பை யுடையதாயினும் புலி எதிர்ப்பட்டாற் பயப்படு மென்றவாறு. புலி பின் மிக்க வுடம்பும் கூரிய கொம்பு முடைய யானை ஊக்க மில்லாத படியினாலே ஊக்கமுடைய புலிக்கஞ்சு மாறுபோல, வலியுஞ் சேனையு முடையவர்கள் ஊக்க மிலராயின் அஃதுடைய வர்களுக் கஞ்சுவரென்பதாம். சின் 600. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு என்பது 1. தடைகள் 2. இவைகள் 3. வெரூஉம் என்பது பிறரெல்லாங் கொண்ட பாடம்