பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 275 614. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் என்பது முயற்சி யில்லாதவன் உபகாரம் பண்ணவேணுமென்று நினைக்கிறது, படையைக் கண்டாலஞ்சும் பேடி தன் கையில் வாளை யாளுதற்றன்மைபோல இல்லையாமென்றவாறு. பேடி வாளையெடுத்துக் கொண்டு சத்துருவைச் செயிக் குறோம்' என்கிற புத்தி யுண்டாயிருந்தாலும், பயத்தாற் செயிக்க மாட்டாதவாறுபோல, முயற்சி யில்லாதவன் உபகாரஞ் செய்ய நினைத்தாலும் தன் வறுமையாற் கூடாதென்பதாம். ச 615. இன்பம் விழையான் வினைவிழைவான் றன் கேளிர் துன்பந் துடைத்துளன்றுந் துண் என்பது ஒருவன் றனக்குச் சுகத்தை விரும்பாமல் காரியங்களை முடிக்கிறத்தை விரும்புவான் தன் சுற்றத்தார்" ஆகிய பாரத்தி னுடைய துன்பத்தினை நீக்கி அவர்களைத் தாங்கும் துரணா மென்றவாறு. காரியத்தை வாஞ்சியாமற் காரணத்தை வாஞ்சிக்கிறவன் எல்லாப்பொருளும்" எய்தும் என்பதாயிற்று. காரியமாகிறது, வரப்போகிறது; காரணமாகிறது முன் செய்தது. டு 616. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை யின்மை புகுத்தி விடும் என்பது ஒருவனிடத்திலே யுண்டான முயற்சியாவது அவன் செல்வத் தினை வளர்க்கும்; முயற்சி யில்லாதது தரித்திரத்தை யடை வித்துவிடு மென்றவாறு. I. செயிக்கிறோம் 2. என்று கருதிச்சென்றாலும் - அச்சுநூல் 3. முடிக்கிறதை 4. சுத்தத்தார்’ என்று காகிதச் சுவடியிலுள்ளது. 5. பயனும் என்பது பரிமேலழகருரையிற் கண்டது