பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

திருக்குறள்

களிக்க இந்திரன் விழைந்தான்; அதற்கு இருகண்கள் போதாவென எண்ணினான்; ஆயிரங்கண்களால் காண வேண்டும் என விழைந்தான்; எண்ணியவாறு எய்தும் தனக்குரிய சரீரத்தின் ஆற்றலால் தன் உடலெங்கும் கண்களையுண்டாக்கிக் கொண்டான். பகவானைக் கண்டு போற்றி மகிழ்ந்தான்; இக்காட்சியைக் கண்ட பெருமக்கள் இந்திரனை ஆயிரங்கண் உடையான் என்று வாழ்த்தினர். (பக்கம் 12. திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதி பகவன்)

இதுகாறும் ஒரளவு ஐயப்பாட்டுக்குரிய குறட்பகுதிகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனான் திருக்குறளிற் கண்ட அவ்வப்பகுதிகள் ஜைந சமயக் கோட்பாடுகட்குரியவாய் அமைந்துள்ளன என்பது தெள்ளிதின் விளங்கும்.

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (41)

எனும் குறளில் இயல்புடைய மூவர் ஆவார் - பிரமசாரி, வானப்பிரத்தன், தவசி என்று காகிதக் கையெழுத்துச் சுவடியில் உள்ளது; வானப்பிரத்தனைப் பெண்சாதி மாத்திரத்துடனே கூட வனத்தில் இருப்பவன் என்று கூறுவர். அச்சுநூலில், “உச்சிஷ்ட பிண்ட விரதம்” என்ற பதினோராம் நிலையில் கெளபீன மாத்திரத்துடனே கூடி ஜிநஸ்துதியிலே யிருக்கிற க்ஷுல்லகர்” என்று உள்ளது.

வானப்பிரத்தம் பற்றிய ஜைநர்தம் கொள்கை ஈண்டு அறிதல் தகும். வேதமார்க்கத்தில் கண்ட வண்ணம் வானப்பிரத்தமாவது தன் மனைவி மக்களோடு காட்டிலிருந்து தவம் செய்வது. இல்லறத்தார் ஊர்களில் வசிப்பர். இவ்வானப்பிரத்தர் காட்டின்கண் உறைவர். உறைவிட வேறுபாடு தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வகையினர் ஜைன சமயக் கோட்பாட்டின்படி வானப்பிரத்தர் ஆவார்.

ஆனால் ஜைனர் கோட்பாட்டின்படி வானப்பிரத்தர் ஆவார் உத்யானத்திலும் காட்டுப் பகுதியிலும் இருந்து, முனிசங்கம் அமைத்து அச்சங்கத்துத் தலைவரும் அவரது மாணாக்கர்களும் தங்கிச் சமயக் கோட்பாடுகளைக் கற்பித்தும் கற்றும்