பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருக்குறள் ஒன்றை நினைக்கிறது, முன் செய்த தீவினை என்பது உ 623. இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர் என்பது ஒரு காரியத்தைச் செய்கிற காலத்திலே அதற்கு வந்த துன்பத்துக்கு வருந்தாதவர் அந்தத் துன்பத்துக்குத் தாங்கள் துன்பம் விளைப்பர் என்றவாறு. வருந்துதல், இளைத்து விட நினைத்தல் WFL 6.24. மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற விடுக்க விைடர்ப்பா டுடைத்து என்பது வண்டி விலங்கின விடத்திலே யதனை விலங்காம லிழுப் பிக்கும் பகடுபோலத் தானெடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்க வல்லவனை வந்தடைந்த விடுக்கண் தானே துக்கப்படு மென்றவாறு. பகடாவது வண்டி யிழுக்கச் சிலே தாங்கிற மரம் தான் னுணியை யூன்றியும் தன் மேலே வண்டியை யேற்றுக் கொண்டு சேற்றுக்குத் தாண்டி விக்கிறதுமாய் இப்படி வருத்தப்பட்டுக் காரியத்தைச் செய்கிறவனுக்கு இடையூறு வாரா தென்பது; வந் தாலும் விலங்கிப் போமென்பதாம். *-P 625. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க விைடுக்கட் படும் என்பது இடைவிடாது மேன்மேலு மிடுக்கண் வந்தன வாயினும், தன் மனசு திடம் விடாதவனுக்கு அந்த இடுக்கண்கள் தாமே 1. காலத்தி லெய்திக்கு என்று காகிதச் சுவடியிலுள்ளது: திருத்தம் அச்சு நூல். 2. இழுக்குங்கால் 3. இவ்வாக்கியம் தவறு படவுள்ளது குறிப்புரை காண்க