பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 27 9 கெட்டுப்போ மென்றவாறு. 626. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர் என்பது வறுமைக் காலத்து யாம் வறிய மாயினம் என்று மனதிலே விசா ரப் படுவார்களோ, செல்வக் காலத்து அயிசுவரியம் வந்துதென்று. சந்தோஷப் படாத பேரென்றவாறு. பொருள் வந்து சந்தோஷப் படாத பேர் வறுமைக் காலத் தும் விசாரப் படா ரென்பதாம் பின் 627. இலக்க முடம் பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் - என்பது தேவகெதி மனுஷகதி விலங்கு கெதி நரகர்' கெதி யென்று சொல்லப்பட்ட நாலு கெதிகளிலு முள்ள வுடம்புகள் துக்க மென்னும் வாளுக்கு இரை யென்று கருதித் தமக்கு வந்த துக் கத்தைத் துக்க மாக நினையார் அறிவுடையா ரென்றவாறு. அறிவுடையார் சரீரம் அநித்தியம் என்று துக் கத்துக்கு விசாரப்படா ரென்பதாம். ĶT 628 இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் துன்ப முறுத லிலன் என்பது தன்னுடம்புக்கு இன்பமானவற்றை விரும்பாதே காரியத் தி னாலே துக்கப்படுகிறதே யியல் பென்று தேறியிருப்பவன் தன் முயற்சியினாலே துக்கப்படா னென்றவாறு. 629, இன்பத்து ளின்பம் விழையாதான் துன்பத்துட் டுன்ப முறுத லிலன் வான்பது தான் செய்த காரியத்தினாலே தனக்கின்பம் வந்தபோது அதனை அநுபவியா நின்று மனத்தால் மிகவும் விரும்பாதவன், துன்பம் = 1. வந்ததென்று 2. நாத என்று காகிதச் சுவடியிலுள்ளது