பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 289 னென்றும், பயனில்லாத காரியஞ் செய்தானென்றும், தன் பழி யைத் தானே துாற்றுகின்றா னென்றும், எல்லாராலும் இகழப் படுதலின் இரங்கி விசாரப்படாமலிருக்கிறதே நல்லதென்பதாம். 656. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்பது தன்னைப் பெத்த” தாயானவள் பசித்திருக்கக் கண்டாலும் அதற்காகப் பெரியோர்கள் பழிக்கத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டா மென்றவாறு. சிர் 657. பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை என்பது பழியும் பாவமும் வரத்தக்க காரியங்களைச் செய்து செல் வத்தை யனு பவிக்கிறத்திலும் பெரியோர்களாயிருந்து தரித் திரத்தை யனுபவிக்கிறதே நல்ல தென்றவாறு." Tே 58. கடிந் கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும் என்பது பெரியோர்கள் ஆகாதென்று சொன்ன காரியங்களைத்தாமு மாக தென்று விடாமல், பொருளுக்காக ஆகாத காரியங்களைச் செய்து முடித்தாலும், அவை பிறகு துக்கத்தைக் கொடுக்கு மென்றவாறு. اہلغے 659. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை என்பது 1. இகழப்பட்டுதல் என்று காகிதச்சுவடி 2. பெத்த-பெற்ற 3. யணுப விக்கிறதிலும் 4. அச்சு நூலில் பரிமேலழ கருாையேதரப்பட்டுள்ளது.