பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருக்குறள் ஒருவன் பொல்லாத காரியங்களைச் செய்து பிறர் விசாரப் படத்தேடின பொருளெல்லாம். இம்மையிலேதானே அவன் விசாரப் படத்தக்கதாய்ப் போய்விடும்; நல்ல காரியங்களைச் செய்து தேடின பொருள்கள், முன்னே யிழந்து போனாலும், பின் வந்து பலன்களைக் கொடுக்கு மென்றவாறு. சிக 660. சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் பசுமட் கலத்துணிர் பெய்திரீ' யற்று என்பது ஒருவன் பொல்லாத காரியங்களைச் செய்து பொருளைத் தேடி வைத்துக் கொள்ளுகிறது எப்படிப் போலே என்றால் பச்சைப் பானையிலே தண்ணிரை வார்த்து அதுக்குக் கனம் பண்ணுகிறாற் போலேயாம் என்றவாறு. செய்கிற போது நன்மை போலேயிருந்து பிறகு கேடுண்டாக்கு மென்பதாம். ஆக அதிகாரம் சுசு க்குக் குறள் சுளசு) இப்பால் 67. வினைத்திட்பம் என்பது, நல்ல காரியங்களைச் செய்து முடிக்கிறவனுக்கு வேண்டி யது மனது திடமென்பது. o 661. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய வெல்லாம் தரும்' என்பது -- ஒரு காரியஞ் செய்கிறத்திலே கெட்டி யென்று சொல்லப் படுகிறத்திலே அவனுடைய மனசு திடமே கெட்டி; அது வல்லா மல் மற்றதெல்லாம் கெட்டியல்ல வென்றவாறு. 1. பெய்திரீஇ என்பது பிறப்பாடம் 1. பிற என்பது பிறரெல்லாம் கொண்டபாடம் 2. செய்கிறதிலே . படுகிறதிலே