பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 6 திருக்குறள் 676. முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல் என்பது ஒரு காரியஞ் செய்யுங்காலத்து அது முடிக்கத் தக்க முயற்சி யும், அதற்கு வரப்பட்ட இடையூறும், அந்த இடையூறு நீங்கி னாற்றானெய்தும் பயனும் சீர்தூக்கி ஆராய்ந்து செய்க என்றவாறு. இச 677. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவா னுள்ளங் கொளல் என்பது ஒரு காரியத்தைச் செய்யத் துடங்கினான். செய்யு முறைமை யாவது, அந்தக் காரியத்தை முன்னே செய்து பலன் பெற்றவன் மனத்தை யறிந்து கொண்டு செய்ய வேணு மென்றவாறு. முன் செய்தவன் மனசை யறிந்தால் அழிகிறதும்? ஆகிறதும் அறியலா மென்பதாம். (a T 6.78. வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள் யானையால் யானையாத் தற்று என்பது ஒரு காரியஞ் செய்கிறவன் அந்தக் காரியத் ஒன , தானே பின்னையும் ஒரு காரியத்தை முடித்துக் கொள்ள வேணும்; அது எப்படிப் போலே யென்றால், மததாரை யால் நனையப்பட்ட கபோலத்தையுடைய யானை யாலே பின்னை யொரு யானை யைப் பிடிக்கிறதினோ டொக்கு மென்ற வாறு. செய்யப் போற" காரியத்தினாலே பின்னையுமொரு காரிய முடிக்கத்தக்க வுபாயம் நினைந்து செய்ய வேண்டு மென்பதாம். -Ք/ 1. தொடங்கினான் 2. அறியிறது என்பது காகிதச் சுவடி 3. மதநீர்ப் பெருக்கு 4. பிடிக்கிறதினோ 5. போகிற