பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 திருக்குறள் 6.87. கடனறிந்து காலங் கருதி யிடனறிந்து தெண்ணி யுரைப்பான் றலை என்பது வேற்றரசரிடத்துத் தான் செய்யுமுறைமையறிந்து அவர் சந்தோஷவேளை பார்த்துத்தான் சொல்லுகிறத்துக்கு இட மறிந்து, சொல்லுகிற வரிசையை முன்னே விசாரித்துக்கொண்டு, சொல்லுகிறவனே தூதர்களுக்கெல்லாந் தலையானவ னென்ற வாறு. o П 688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு என்பது தன்னுடைய ராசா சொன்ன வார்த்தையை அவன் சொன்ன படியே வேற்றரசர்க்குச் சென்று சொல் வானிலக்கணமாவது: பொருள் காமங்களாலே சுத்தனாதலும், தனக்கு மாற்றரச னுடைய மந்திரிகள் துணையாதலும், துணிவுடைமையும் என்று சொல்லப்பட்ட இந்த மூன்று குணங்களுடனே கூட மெய்ம்மை யுண்டா யிருக்க வேணு மென்றவாறு. பொருள் காமங்களிலே சுத்தனாகிறது, திரவிய வாசையினா லேயும் பூரீ மோகத்தினாலேயும் மனது பேதியாம லிருக்கிற தாம். աթ] 689. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்" என்பது தன்னரசன் சொன்ன வார்த்தையை வேற்றரசனுக்குச் . சொல்லுகிறவன், தனக்கு வருகிற குற்றத்துக்குப் பயப்பட்டு அவனுக்குத் தாழ்வான வார்த்தையைச் சொல்லப் போகா? தென்றவாறு. கூ' 1. சொல்லுகிறதற்கு 2. "ணவர்' என்பது காகிசச் சுவடி 3. ச்ொல்லாத திண்மையுடையவன் அச்சுநூல்; பரிமேலழகருரை