பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 307 முகம் சந்தோஷத்துக்கு மலர்ந்தும் கோபத்துக்கு வாடி யிருக்கு மென்பதாம். 51 708. முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி யுற்ற துணர்வார்ப் பெறின் என்பது மனதிலே நினைத்ததைக் குறிப்பா லறிந்து அந்தக் குறை யைத் தீர்க்க வல்லவர்களைக் கண்டால், அவர்கள் முகத்தைப் பார்த்து’ நிற்கிறதே போது மென்றவாறு. அவர்கள் முகத்தைப் பார்த்து நின்றால் அவர்கள் இவன் முகத்தைப் பார்த்துக் குறை தீர்ப்ப ரென்பதாம். قلعے| 709. பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின் என்பது அரசனுக்குத் தன்னுடைய பார்வை வேற்றுமையை அறிய வல்ல மந்திரிகளே வேணும்; அப்படிப்பட்ட மந்திரிகள் வேற்று வேந்தரிடைச் சென்றால், அவர்கள் மனத்திலேயிருக்கிற பகை யையுஞ் சந்தோஷத்தையுஞ் சொல்லாவிட்டாலும், அவர்கள் கண் பார்வையினாலேயும் முகக்குறிப்பினாலேயும் அறிவர்க ளென்பதாம். சின், 710. நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற என்பது யாம் சூட்சமான அறிவை யுடையோ மென்றிருக்கிற மந்திரிகள் ராசாக்கள் கருத்தினை யளவிடப்பட்ட* கோலாவது, கண்களல்லாமற் பின்னையொன்று மில்லையென்றவாறு. 1. வாடியுமிருக்கு - அச்சு நூல் 2. பாத்து என்பது காகிதச் சுவடி 3. குட்சுமமான - நுட்பமான (அச்சுநூல் கி. அளக்கும்