பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

29

போன்று இன்றியமையாத பெருஞ்சிறப்புடையவர் ஆவர். ஜைநசமயக் கோட்பாட்டின்படி மக்கட் சமுதாயத்தில் உழுபவர் சிறந்த இடம் பெறுபவர் ஆவர். இச்சிறப்பு ஜைநசமயக் கோட்பாட்டிற்கேயுரியது.

“பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை” (குறள் 345) என்ற தத்துவமும் உன்னுதற்குரியது. அபரிகிரஹம் (பொருள் நீக்கம்) என்ற கோட்பாடு தவம் செய்வார்க்குரியது. பொருளுடைமை தவசிக் குரியதன்று. மனத்தாலும் பொருள் வேண்டும் என்று கருதுதல் தவசிக்கில்லை சம்சாரிக்கே ‘பரிமிதபரிக்கிரகம்’ வேண்டிய அளவு பொருளுடைமையுண்டு. தவசிக்குப் பொருளே வேண்டியதில்லை. தவசிக்கு வேண்டிய யாவற்றையும் தந்து காத்தற்கே சம்சாரி இருக்கிறான் என்பதைத்

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல்
மற்றை யவர்கள் தவம்” (263)

- எனும் குறள் கூறுகிறது.

எனவே தவசிக்குரியது “அபரிக்கிரகம்” என்றும், சம்சாரிக்குரியது “பரிமித பரிக்கிரகம்” என்றும் கொள்ளல் வேண்டும். “செய்க பொருளை” என்பது குறள் 759.

“அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீ தின்றி வந்த பொருள்” (754)

- என்பதும் அறிதற்

பாலது.

இங்ஙனம் பொது அறங்களோடு, சில விடங்களில் ஜைந சமயத்துக்கேயுரிய கோட்பாடுகளைக் கூறும் நூலாகவே திருக்குறள் காணப்படுகிறது. அக்கோட்பாடுகளுள் சிகரம் வைத்தாற் போன்றமைவது “கொல்லாமை” என்னும் அறமாகும். அஹிம்ஸா பரமோ தர்ம : என்பது முழுமையாக ஜைந சமயக் கோட்பாடு. வேதநெறியினருள், வேள்வி செய்பவர், வேள்வியில் கொலை செய்பவராகவே கருதப்படுவர்.

“அவிசொறிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத் துண்ணாமை நன்று” (259)

- என்பது