பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருக்குறள் இங்கிதம் வடிவு தொழில் சொல்லென்பது. முதலாகப்பிறர் மனதை யறியும் பிரமாணங்கள் பலவு முளவாயினும் இவைக ளெல்லாம் மறைக்கப்படும்; கண்கள் மனதுடனே கூடினதான படியினாலே மறைக்கப் போகாதென்பதினாலே கண் பிரித்துக் கூறப்பட்டது. [a ஆக அதிகாரம் எயக க்குக் குறள் எளய இப்பால் 72. அவையறிதல் என்பது, அரசனுடனே யிருந்த சபையினுடைய லட்ச ணத்தை யறிகிறது. 711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் றொகையறிந்த துய்மை யவர் என்பது செஞ்சொல் இலக்கணைச்சொல் குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொல்லையும் அறிந்த நன்மையினை யுடையவர், தாமொன்றைச் சொல்ல வேண்டினால், அப்பொழுது சபையை யறிந்து ஆராய்ந்து விசாரித்துச் சொல்லுக வென்றவாறு. ஆகிற வசனத்தையே சொல்ல வேணும்; ஆகாத வசனங் களைச் சொல்ல வேண்டா மென்பது. அதி 712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி னடைதெரிந்த நன்மை யவர் என்பது சொற்களினுடைய நன்மையை யறிந்தவர்கள், சபையிலே வொன்றைச் சொல்ல வேண்டினால், அந்தச் சொல்லினுடைய 1. அறிந்தவழி அவாரன் என்பன அச்சுநூல் மேலுமுள்ளன. 2. இலக்கணச் சொல் என்பது காகிதச் சுவடி, குறிப்புரை காண்க: :முதல் வரை அதன் செவ்வியை ஆராய்ந்தறிந்து - அச்சுநூல்