பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 II 718. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது பிறர் சொல்லாமல் கல்வியின் பொருள்களைத்தானே யறிய வல்லவர்கள் சபையில், கற்றவனொருவசனத்தைச் சொன் னால்?, தானே வளருகிற பயிரினுடைய பாத்தியிலே தண்ணிரை வார்த்தாற் போலா மென்றவாறு. கற்றார் முன் சொன்னால் மிகவும் அதிகமாமென்பது. -إكس 719. புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள நன்கு செலச்சொல்லு வார் என்பது நல்லோர் சளிருந்த சபையிலே நல்ல பொருள்களை அவர் கள் மனத்துக் கேற்கச் சொல்லுகிறவர்கள்', அறிவில்லாத புல்லரிருந்த சபையிலே நல்ல பொருள்களை மறந்தும் சொல் லாமலிருக்க வேணுமென்றவாறு. சொன்னா லந்தப்புல்லர் மகிழவே தானும் மகிழ்தலால் | பலவரையும் நல்ல பொருள்களையும் அறியாரென்பதாம் , 720. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் என்பது நல்லவர்கள் தம்மோடொத்த நல்லவர்களல்லாத புல்லர் சபையிலே யொன்றைச் சொல்லாமலிருக்க வேணும்; சொன் னாற் சாக்கடையிலே விழுந்த அமுதத்தோடொக்கு மென்ற வாறு, சாக்கடையிலே விழுந்த அமுதம் பயன்படாததுபோல, நல்லவர் வசனமும் பிரயோசன மில்லாமற் போமென்றவாறு. ஆக அதிகாரம் எல்உக்குக்குறள் எள, ) 1. பாற்றியுள்' என்பது காகிதச்சுவடி. 3. சொல்லல் - அச்சுநூல் வாத்தாப். என்பது காகிதச் சுவடி 4. சொல்கிறவர்கள் : குறிப்புரை «Inoctra