பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 12 திருக்குறள் இப்பால் 73. அவையஞ்சாமை என்பது சொல்லுதற்குரிய சபையினை யறிந்து சொல்லுகுற' போது பயப்படாமலிருக்க வேணு மென்றவாறு, 721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் றொகையறிந்த துய்மை யவர் என்பது நல்ல நூல்களைக்கற்று வல்லவர் ஆனவர்கள், சபையிலே ஒன்றைச் சொல்லுகிறபோது, வழுவுதலில்லாமற் சொல்லுவர்க ளென்றவாறு. அ; 722. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார் முற் கற்ற செலச்சொல்லு வார் என்பது கற்றவர் எல்லாரினும் இவர் நன்றாய்க் கற்றவர் என்று உலகத்தாராற் சொல்லப்படுவார்; கற்றவர்க ளிருக்கிற சபை யிலே தான் கற்ற நூற்பொருள்களை யவர்கள் மனதுக் கேற்கச் சொல்லப்பட்டவர்க*ளென்றவாறு. 으 723. பகையகத்துச் சாவா ரெளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர் என்பது சண்டையிலே பயப்படாமற் போய் விழுந்து சாகவல்லவர் களுலகத்திலே மெத்த வுண்டு; சபையிலே போய்ப் பயப்படா மற் சொல்ல வல்லவர்கள் கொஞ்ச மென்றவாறு. ПFL 724. கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருண் மிக்க கொளல் என்பது 1. சொல்கிற 2. சொல்லவல்லவர் - அச்சு நூல்