பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 31 & பல நூல்களையுங் கற்றவர்களுடைய சபையிலே, தான் கற்ற கல்வியை யவர்கள் மனங் கொள்ளச் சொல்லி, அதிலும் மிகுந்த கல்வியைப் பெரியவர்களிடத்திலே அறிந்து கொள்க வென்றவாறு. எல்லா மொருவற்குக் கற்கக் கூடாமையால், வேறு வேறான கல்வியுடையார் பலரு மிருந்த சபையிலே, தான் கற்றவற்றைச் சொல்லி, அவர்கள் கற்றதெல்லாம் கற்கப் போகா விட்டால் கேட்டறியலாமென்பது. அா 7 25. ஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா - மாற்றங் கொடுத்தற் பொருட்டு என்பது சொல்லிலக்கண நெறியான் அளவை நூல்களைக் கற்க; அப் படிக் கற்றவன் வேற்று வேந்தரிடைப் போனால், அவர்கள் சபையிலே அவர்கள் சொன்ன சொற்களுக்குத் தான் பிறி தி: சொல்லுகிறத்தின் பொருட்டென்றவாறு. மாறுத்தரமாவது ஞாய மார்க்க மென்பதாம்." டு 7 26 . வாளொ டென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் நுண்ணவை யஞ்சு பவர்க்கு என்பது மனசு திடமில்லாதவர்களுக்கு வாளுடனே யென்ன காரிய முண்டு; அதுபோல நுண்ணிய ராயுஞ் சபைக்குப்பயப்படுகிற வர்களுக்குச் சாத்திரங்களுடனே யென்ன பலனுண்டாகு மென்ற வாறு. சபைக்குப் பயப்படுகிறவன் நூலுக்குரிய னல்லனென்பதாம். சு 7 27. பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல் வான்பது o 1. உத்தரம் அச்சு நூல் 2. சொல்கில தின் 3. இவ்வாக்கியம்.அச்சு லில் இல்லை 4. நுண்ணிாாது - அச்சு நூல்