பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 திருக்குறள் சண்டையிலே பயப்படுகிறவன் கையிலே யிருக்கிற வாள் போலே யாம்; சபையிலே சொல்லப்பயப்படுகிறவன்' கற்ற நூலென்ற வாறு. சண்டை பண்ண மாட்டாதவன் கையிலே வாள் பிரயோசன மில்லாதது போலச் சபையிலே சொல்ல மாட்டாதவன் கற்ற நூலும் பிரயோசன மில்லாமற் போ மென்பதாம். TT 7.28. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் என்பது நல்லவர்களிருந்த சபையிலே நல்ல நூற் பொருள்களைப் பயத்தி னாலே அந்தச் சபைக் கேற்கச் சொல்ல மாட்டாதவர்கள், பல நூல்களையுங் கற்றாலும் உலகத்தாருக்குப் பிரயோசன மில்லை யென்ற வாறு, பெரியோர்கள் முன்னே சொல்ல மாட்டாத படியினாலே கல்வியுண்டென்று அறிவாரில்லை யென்பதாம். تلے | 729. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா றவையஞ்சு வார் என்பது நல்ல நூல்களைக் கற்று அதினுடைய பயனை யறிந்தும், நல் லோர்களிருந்த சபையிலே சொல்லப் பயப்பட்டவர்களை யுல கத்தார் கல்லாதவர்களிலுங் கடையானவர்களென்று சொல்லு வார்க ளென்றவாறு. தான் கற்ற கல்வியைப் பெரியோர்கள் முன்னே சொல்லாவிட் டாற் றனக்கும் பயனெய்தாதென்றும், பிற ரறியச் சொல்ல மாட்டாத படியினாலே பிறருக்கும் பயன் படாதென்றும், உல கத்தார் கல்லாதவனினும் கெட்டவ னென்றுஞ் சொல்லுவ ரென்பதாம். 凸壬上 1. இது அச்சு நூல் சொல்லப்படுகிறவன் என்பது காகிதச் சுவடி : 2. அவற்றின்