பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

31

கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் தவம் மறைந்து அல்லவை செய்து ஒழுகுதல் - பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் பற்றிப் பேசப்படுகின்றது. அக்குறள்களுள் ஒன்று பின்வருவது:

“மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்” (278)

என்று, நீராடும் துறவிகளின் வஞ்ச மனத்தைப் பற்றிப் பேசப் பட்டுள்ளது. “மழித்தலும் நீட்டலும் வேண்டா” (280) என்பது இந்து, பெளத்தத் துறவிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் “நீராடி மறைந்தொழுகு மாந்தர்” என்பது இந்து சமயத் துறவிகளையே குறிக்கும். நீரிற் பலகால் மூழ்கல் அவர்க்கே யுரியதாகையால் சமண சமயத் துறவிகளைக் குறிக்காது. இங்ஙனம் துறவிகளின் கூடாவொழுக்கத்தைச் சாடிய திறன் துாய்மையைக் கடைப்பிடித்தொழுகும் ஜைந சமயக் கோட்பாட்டுக்கு அச்சாணி போன்றமைகின்றது.

இல்லற நிலையில் உள்ளவர் எட்டு மூல குணங்களைக் கைக் கொள்ள வேண்டும். அவையாவன: கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, (ஐந்து அநு விரதங்களாகிய) கொல்லாமை. பொய்யாமை, கள்ளாமை, பிறன் மனை விழையாமை, மிகு பொருள் விரும்பாமை (வெஃகாமை) என்பனவாம். மேற்கண்ட ஜைந நூல் துணிபுகள் அஃதாவது ஒழுக்கங்கள் எட்டில் தேன் உண்ணாமை தவிர்த்து மற்ற ஏழும் திருக்குறளில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன.

‘த்ரிகுப்தி’ என்பது ஜைந சமயக் கோட்பாடுகளுள் ஒன்று. த்ரிகுப்தியாவது காயத்தின் அடக்கம், வாக்கினடக்கம், மனோவடக்கம் என மூன்றுமாம். அடக்கமுடைமை என்னும் 13 ஆம் அதிகாரம் இதனை நன்கு விளக்கும். ‘செறிவறிந்து’ (123) என்பது காயத்தின் அடக்கம். ‘ஒன்றானும் தீச்சொல்’ (142) என்பது வாக்கின் அடக்கம். ‘கதங்காத்து’ (130) என்பது மனோவடக்கம்.

பஞ்சேந்திரிய விஷய ஜெயம் (தி. ஆ. பக் 146) என்பதும் ஜைநசமயக் கோட்பாடுகளில் சிறந்த தொன்று. இதனை