பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.30 திருக்குறள் 768. அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை படைத்தகையாற் பாடு பெறும் என்பது சேனை பகைவர் மேலே சென்று செயிக்கப்பட்ட திண்மை யும் அவர்கள் தன் மேலே வந்தால் பொறுக்கத் தக்க வலுமை யும் இல்லாவிட்டாலும் அலங்காரத்தினாலே பெருமை பெறு மென்றவாறு. அலங்காரமாவது, தேர் யானை குதிரைகளும் கொடிச்சிலை குடை மேளவாத்தியங்களும் *காண்பிக்கப் புறப்பட்டால் பகை வரஞ் சுவர்களென்பதாம்." جملے| 769. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை என்பது தன்னைக் கொஞ்சம் பண்ணிக் கொள்ளுகிறதும், மனதிலே விடாத வெறுப்பும், தரித்திரமு மில்லா விட்டால் பகையை வெல்லலா மென்றவாறு. தரித்திரமாவது, சம்பளங்கொடாதது. செல்லாத் துனியா வது, தன் பெண் சாதி பிள்ளைகளை நினைக்கிறதும், குற்றமான காரியங்களைச் செய்கிறது.மாம். இப்படிச் செய்தால் படை வெல்லாதென்பது. அத 770. நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில் என்பது சண்டை பண்ணச்சலே வீரரானவர்கள் வெகுவாயிருந் தாலும், அதற்குத தலைவனான துரை யில்லாவிட்டால் சேனை நில்லா தென்றவாறு. 1. கொல்லும்-அச்சுநூல் 2. வலிமையும். 3. பிறப்பட்டால்-என்பது காகிதச்சுவடி. முதல் வரை 'பாடு-கண்ட அளவில் பகைவர் அஞ்சும் பெருமை’ என்று அச்சு நூல் 4. பண்ணச்சே-பண்ணுங்கால்