பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 திருக்குறள் 773. பேராண்மை யென்ப தறுகனொன் றுற்றக்கா லுனராண்மை மற்றத னெஃகு என்பது பகைவர் எதிர்த்த போது அவர்கள் பேரிலே தயையில்லா மல் செயிக்கிறத்தையே பெரிய வாண்மை யென்று சொல்லுவர் : அந்தப் பகைவர்க்குத் தாழ்வு வந்த போது அவர்கள் மேலே தயை வைத்து அந்தக் குறையைத் தீர்க்கிறது அந்த ஆண்மைக்குக் கூர்மை யென்று சொல்லுவரென்றவாறு. அதெப்படியென்றால் இராவணன் சண்டை பண்ணச்சிலே' அவன் சேனை யெல்லாம் போய்த் தனியனா யகப்பட்டபோது ராமசுவாமி கண்டு அவனைக்கொல்லாமல் விட்டு இன்று போய் நாளைக்கு உன் சேனைகளை யெல்லாங் கூட்டிக் கொண்டு யுத்தத்துக்கு வா' என்று அனுப்பி விட்டது போல என்பது. ЛН_ 774. கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய் வேல் பறியா நகும் என்பது கையிலே யிருந்த வேலைத் தன் மேலே வந்த யானையைப் போட்டுப் பின்னையும் வருகிற யானையைப் போட வேல் தேடு கிறவன், தன் மார்பிலே பட்டுருவியிருக்கிற வேலைக்கண்டு பிடுங்கிக் கொண்டு சந்தோஷப் படுவ னென்றவாறு. கை வேலை யானையி னுடனே போக்கினது, யானை செத்த தாம். சந்தோஷப் படுகிறதாவது தான் தேடின வேல் 7.75. விழித்த கண் வேல் கொண் டெறிய வழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு என்பது --- 1. யெதுத்த போது என்பது காகிதச் சுவடி 2. செயிக்கிறதையே 3. ஊராண்மையாவது. 1. பண்ணுங்கால் யானையைக் கொல்லுமாறு விடுதல் - அச்சு நூல்