பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 0 திருக்குறள் 795. அழச் சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல் என்பது தான் உலகவழக்க மல்லாத காரியத்தைச் செய்ய நினைத் தால் அழத்தக்கதான கடின வார்த்தைகளைச் சொல்லி விலக்கியும், செய்தாற் பின்புஞ் செய்யவொட்டாமல் நெருக்கிப் பிடித்தும், நல்ல காரியங்களைச் செய்யாவிட்டால் அதட்டிச் செய்விக்கவும் வல்லவர்களை ஆராய்ந்து பார்த்து நட்புக் கொள்ள வேணு மென்றவாறு. டு 796. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் என்பது ஒருவனுக்குக் கேட்டிலேயு முறுதியாவது தன்னிட சுற்றத் தார் மனதுகளைப் பயப்படாம லாராய்ந்து அறிகிறதே; அப்படி ஆராய்கிறவனுக்கு ஒருநல்லறிவு பிறக்குமென்றவாறு. சினேகம் ஆனத்தையும்" செயல்களையு மாராய்ந்தால் இவனுக்கு நல்லறி வும் அவனுக்கு அடக்கமும் வருமென்பது. :יה 797. ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல் என்பது ஒருவனுக்குப் பெறப்பட்ட பேறாவது, அறிவில்லாதவ னுடனே சினேகம் பண்ணினா லதைக் கழியவிட்டுவிடுகிறதே பலனென்றவாறு" 1. விலக்கவும்: 2. பிடிக்கவும் - அச்சுநூல் .*. ஒருவனுக்குக் கேடு என்பது - அச்சுநூல் 4. தன்னுடைய

  • முதல் * வரை; எஞ்சாமல் அளப்ப்து ஒரு கோல் அக்கேட்டிலும் -

அச்சு நூல். 5. சினேகிதன் மனத்தையும் - அச்சுநூல் .ே விட்டுவிடுகிறதே பலன் - விட்டு அவரின் நீங்குதல் - அச்சுநூல்