பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 355 அறிவில்லாதவன் ஒரு பிறப்பிலே செய்த கொடிய வினை யாலே யேழெழு பிறப்பும் நரகமுண்டாமென்பதாம். டு 836. பொய்படு மொன்னோ புனை பூணுங் கையறியாப் பேதை வினை மேற் கொளின் என்பது செய்கிற முறைமை யறியாத பேதை யானவன் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால் அந்தக் கருமமுங் கெட்டுத் தானுங் குற்றத்தை யடைவா னென்றவாறு. கருமங்கெடுகிறது. பின்னை யாகாதது; தான்குற்றப் படுகிறது, எல்லாராலுமிகழப்படுதலாம். :Hח 837. ஏதிலா ராரத் தமர்.பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை என்பது பேதை யானவனுக்கு முன் செய்த புண்ணியத்தினாலே அயி சுவரியம் வந்தால், அவனுக்குரியரல்லாத பேர் அந்த அயிசு வரியத்தை யனுபவிப்பர்; உரியரானவர்கள் பசித்திருப்பா ரென்றவாறு. a T 838. மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின் என்பது பேதை யானவன் தன் கையிலே யொரு பொருளுண்டாகப் பெற்றாற் பயித்தியக் காரன் கள்ளைக்குடித்து மயங்கினாற் போலு மென்றவாறு. அறிவில்லாத வனுக்குச் செல்வம் வந்தாற் பயன் வரா தென்பது. السلے 839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பிழை,தருவதொன் றில் என்பது