பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திருக்குறள்

“ஒருத்தன் அவ்வாறு ரக்ஷிக்க வேண்டுமானால் எமக்குக்கை காட்டியும் நிலம் காட்டியும் வஞ்சனையாற் சொல்ல வேண்டுவதில்லை; என்னை,

“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்” (292)

என்பது எம்மோத்தாகலின், பிராணி பிடாநிவ்ருத்தி அர்த்தமாகப் பொய்யுரைத்தலும் ஆவதாதலினென்பது (326 ஆம் செய்யுளுரை).

வாமனமுனிவர் ஜைநர்; அவர் குறளைத் தம் ஓத்து வேதம் என்கிறார்; ஆகவே குறளை ஜைந நூலாகவே கொள்ளல் தகும்.

தமிழில் பிரமோத சந்திரோதயம் என்றொரு நாடக நூல் உள்ளது. இது சமஸ் கிருதத்தினின்று தழுவப்பட்ட நூலாகும். இதில் பல்வேறு சமய பாத்திரங்கள் நாடக அரங்கில் தோன்றித் தத்தம் சமயப் பெருமையைக் கூறுகின்றனர். சைனச் சார்பினன் அரங்கில் ஏறியதும்,

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செத் துண்ணாமை நன்று” (259)

என்ற குறளைக் கூறிக்கொண்டே வருகிறான். இந்நூலாசிரியர் ஜைநமதத்தவரல்லர். எனினும் இவர் திருக்குறளை ஜைந நூலாகவே கருதுகிறார் என்பது அறியப் பெறும் என்று பேரா அ. சக்கரவர்த்தி அவர்கள் எழுதியுள்ளார். பிரபோத சந்திரோதயம் என்னும் நூல் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக 1988 இல் அச்சிடப் பெற்றுள்ளது அந்நூல் 180 ஆவது சமணனாதியர் சருக்கம் (செ.ச) (செ. 680) பின்வருவது:–

“அவிசொரிந் தனலில் வேள்வி
ஆற்றுதும் எனவூன் உண்ணும்
புவிமிசை பசுவைக் கொன்று
புன்தொழில் இயற்றுந் தீயோர்