பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

35

எவரையும் இசைந்து காணில்
இருவிழி புதைத்துத் தீங்கு
நவில் மறை நுழைவு றாமல்
நாம செவி சேமம் செய்தும்.

இப்பாடலில் அவிசொரிந் தென்ற குறளின் ஒரு பகுதியிருத்தல் காணலாம்.

சென்னை-இராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில், 1949 இல் பாரதீய ஞானபீடம்: தமிழ் வரிசை எண் 1 ஆக திருக்குறளுக்குக் கவிராஜபண்டிதர் உரை என்ற பெயரால் பேராசிரியர் அ. சக்கர வர்த்தி என்பார் ஒர் அரிய வுரையை அரிதின் முயன்று அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அப்பேராசிரியர் பயன்படுத்திய ஏட்டுச் சுவடிகள் ஆறாகும். அவற்றுள் எதிலும் உரையாசிரியர் பெயர் குறிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியிலும் உரையாசிரியர் பெயர் குறிக்கப்படவில்லை. பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் குறித்தது போல் எல்லிஸ் அவர்கள் தம் ஆங்கிலப் பொழிப்பு-விளக்கங்களுடன் உள்ள நூலில் இரண்டிடங்களில் ஜைநச் சார்பான உரை எழுதியவர் கவிராச பண்டிதன் என்கிறார். எண் குணத் தானைப்பற்றிக் கூறுங்கால் பக்கம் 19 இல்

“The attributes are similarly enumrated with the exception of the last in the following explanation of the couplets in the commentary on the Curals in use among the Jains attributed to Caviraja Panditer (அழியா வியல்பு என்ற விடத்துக் கவிராச பண்டிதருரையில் சகல சம்யக்த்வம் என்று உள்ளதை நோக்கி மேற்கண்ட ஆங்கிலப் பகுதி எழுதப்பட்டது).

மேலும் 25ஆம் குறளாகிய “ஐந்தவித்தானாற்றல்” பற்றி எழுதிய எல்லிஸ்,

“The Jains however disputing the authority of mythological story give it a very different interpretation. Caviraja Pandither accordingly thus renders the couplet: ஐம் பொறிகளையும் ஆசையின் வழியே அடக்கினவனுடைய வல்லமைக்கு”