பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5 & திருக்குறள் 872. வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை என்பது

ஒருவன் வில்லை யுடையவர்களாகிய ஆயுதங்களைப் பிடித் திருக்கிறவர்களுடனே பகை பண்ணிக் கொண்டாலும், சொல்லை யுடைய வித்துவான் சளுடனே பகை கொள்ள வேண்டா மென்றவாறு ஆயுதங்களைப் பிடித்தவர்களுடனே பகையானால், தனக்கு மாத்திரம் கேடுவரும்; சொல் வல்ல வித்துவான்கள் முதலான வர்களுடனே பகையானால், தன் வங்கிசத்தாருக்குங் கேடு வருகிறது தப்பா தென்பதாம். 구L 873, ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன் என்பது தான் தனியனாயிருந்து பலருடனேயும் பகை பண்ணிக் கொள்ளுகிறவன், பயித்தியக் காரனிலும் அறிவில்லாதவன் என்றவாறு. தனியனாவது, சுற்றத்தார் சினேகிதர் படை அரண் முதலானதும் இல்லாதது பயித்தியக்காரனுக்குக் கேடுவராது: அறிவில்லாதவனுக்குக் கேடுவரும்: பலரோடும் LΙ ΕΤΕΠ έΗ: கொண்டால் மிகவும் கேடுவருமென்பதாம். Wi 874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கட் டங்கிற் றுலகு என்பது பகைவரை சொந்த விதத்தினாலேயும் தனக்குறவாகப் பண்ணிக் கொள்ளவல்ல ராசாவினுடைய குடையின் கீழே தங்கியிருக்கும் உலக பொன்றவாறு. 1. முதலியவை இன்மை-அச்சுநூல் 2. தகமை என்பது காகிதச் சுவடி