பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

திருக்குறள்

என்றமையாலும் ஜைநச் சார்பானவுரை எழுதியவர் கவிராச பண்டிதர் எனத் தெரிய வருகிறது.

Francis Whyte Ellis (ஃபிரான்ஸிஸ் வைட் எல்லிஸ்) என்பவர் 1796 முதல் 1819 வரை சென்னையில் ஆங்கில அரசாங்கத்தில் வருவாய்த்துறையில் உயர் பதவியில் இருந்தவர். இவர் காலத்தில் ஜைநச் சார்பான உரையியற்றியவராகக் கவிராச பண்டிதர் கருதப்பெற்றார். இந்நாட்டில் வாழ்ந்த பிற அறிஞர்கட்கு எக் காரணத்தாலோ இந்த ஜைநச் சார்பான உரை தெரியாம லிருந்தது எப்படியோ இது 1949இல் அச்சேறலாயிற்று. ஜைநச் சார்பான உரையாகிய கவிராஜ பண்டிதருரை அச்சிடுவதற்குப் பயன்பட்ட ஒலைச்சுவடிகள் ஆறு என்று அவ்வச்சு நூல் முகவுரையில் சொல்லப்பட்டுள்ளது. அவையாவன:

1. மேலச் சித்தாமூர் மடத்துச் சுவடி: மேலச் சித்தாமூரில் ஜிந காஞ்சிமடம் என்று ஒரு சிறந்த ஜைநத் திருமடம் உள்ளது. அந்த மடத்துத் தலைவர் அவர்களுக்குக் கவிராஜ பண்டிதர் உரை கொண்ட ஏட்டுச் சுவடியிருக்கிறதா என்றெழுதினேன். பதில் இல்லை.

2. பெருமண்டூர்ச் சுவடி: கவிராஜ பண்டிதர் பிறந்தவூராகக் கருதப்படுவது, பெருமண்டூர். இவ்வேட்டுச் சுவடிபற்றிக் கேட்ட பொழுது அவ்வூரிலிருந்த சுவடிகள் திருடு போய் விட்டன என்று கூறப்பட்டது.

3. வீடுரிலிருந்து: இரண்டு சுவடிகள் தமக்குப் பயன்பட்டன என்று பேரா. அ. சக்ரவர்த்தி அவர்கள் தம் முன்னுரையில் குறித்துள்ளார். அச்சுவடிகள் புராண சந்திர நாயனாருடையவை. அவற்றுள் ஒரு சுவடி திருநறுங் குன்றத்திலிருந்த ஏட்டுச்சுவடியைக் கண்டு செப்பனிடப்பட்டது என்றும் தெரிய வருகிறது. அச்சுவடிகளைப்பற்றித் தக்கவர்கட்கு எழுதியபொழுது அச்சுவடி இல்லை யென்று பதில் வந்தது.

4. சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்துச்சுவடி. இது செப்ப மான சுவடி. இது ருத்கோத்காரிவருஷம் அற்பிச மாதம் 10 ஆம் தேதி குருவார நாள் வீராசாமி என்பவரால் எழுதப்பட்டது என்ற குறிப்புடையது. இதில் 70 அதிகாரங்கட்கு மட்டும் உரையுண்டு. எஞ்சிய பகுதி குறள் மூலம் மட்டும் உள்ளது. இது திருக்குறள்