பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 387 922. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரான் எண்ணப் படவே ண்டா தார் என்பது அறிவுடைய ரானவர்கள் கள்ளினை யுண்ணாமலிருக்க வே னும்; அந்தக் கள்ளைக் குடித்தாம் பெரியோர்களெல்லாம் கள்ளுண்டவனை யிகழ்வார்கள்: கள்ளுண்பவர் அறிவும் ஆசாரமு மிழப்பரென்றவாறு. B 92.3. ஈன்றாள் முகத்தேயு மின்னாதா லென் மற்றுச் சான்றோர் முகத்துக் களி என்பது என்ன செய்தாலுங் கண்டு சந்தோஷப் படுகிற தாய் முன்னே ஆனாலுங் கள்ளுண்டு களிக்கிறது. பொல்லாதாயிருக்கும்; ஒரு குற்றமும் பொறாத பெரியோர்கள் முன்னே கள்ளுண்டு களிக் கிறது என்னமாயிருக்கு மென்றவாறு. கள்ளுண்டால் அறிவும் நாணமும் இழந்துவிடும். அது கண்டால் தாய் ஆன வளு க் கும் பொல்லாதாயிருக்கும்; தாய்க்கும் பொல்லாதானால் உலகத்தா ருக்கும் பொல்லாதாகிறது சொல்லவேண்டாமென்றவாறு. ДН - 924. நானென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு என்பது கள்ளென்கிறது எல்லார்க்குங் குற்றமாயிருக்கும்; இந்தக் கள்ளைக் குடிக்கிற"வர்களுக்கு நாணமென்று சொல்லப்படுகிற பூரீயெதிரே நில்லாமல் வெட்கி யப்பாலே போவாள் என்றவாறு கள்ளை க்குடிக்கிறவர்களுக்கு நாணமும் அபிமான முங் கெட்டுப் போ மென்ற வாறு. 1. களிக்குறது என்பது காகிதச்சுவடி 2. அவருக்கு யாதாயிருக்கும்-அச்சு நூல் 3. குடிக்குற சி. படுகுற-காகிதச்சுவடி