பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

37

வகுத்துரை என்று சுவடிக்கட்டையின்மேல் மையால் எழுதப் பட்டுள்ளது.

5. திரு T.S. ஶ்ரீபால் நயினார் அவர்கள் செஞ்சியினின்று கொணர்ந்த குறைச்சுவடி இதில் “ஏலாசாரியரால் சிருஷ்டிக்கப் பட்ட திருக்குறள்” என்று எழுதப்பட்டுள்ளதாகப் பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திரு T.S. ஶ்ரீபால் அவர்களுடைய நூல்கள் திருப்பணமூரில் சேகரித்து அண்மையில் வைக்கப்பட்டுள்ளன. அத்தொகுப்பில் ஜைநச்சார்பான வுரையுடைய திருக்குறள் ஏட்டுச்சுவடி இல்லை என்று தெரிய வருகிறது.

1949 இல் சிறந்தமுறையில் அச்சிடப்பெற்ற நூலில் (கவிராஜ பண்டித ருரை) அதன் பதிப்பாசிரியர் ஆகிய பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் சிறந்ததொரு முன்னுரை வரைந்துள்ளார்கள். திருவள்ளுவமாலையில் கண்ட பாடல்களுள் நக்கீரருடையதாகக் கருதப்படும் “தானே முழுதுணர்ந்து” (செ 7) மாமூலனாருடையதாகிய “அறம் பொருள்” (செ. 8), கல்லாட ருடைய “ஒன்றே பொருள்” (செ.9,) நல்கூர் வேள்வியார் பாடிய “உப்பக்கம் நோக்கி” (செ. 21) என்ற நான்கு பாடங்களை ஆய்வு செய்து திருக்குறளாசிரியருடைய ஜைனச் சார்புபற்றி விளக்கமாக எழுதியுள்ளார்.

“தானே முழுதுணர்ந்து தண்டமிழிற் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழி னுரைத்தார்க்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழி யுலகென்னாற்று மற்று”

என்பது நக்கீரர் பாடல்.

இப்பாடலினின்று திருக்குறளாசிரியர் “முழுதுணர்ந்தவர்” அதாவது எல்லாப் பொருள்களைப் பற்றியும் முழுதும் உணர்ந்த ஞானி என்று அறியப் பெறும். இவர் தமிழில் இந்நூல் செய்துள்ளார் என்பதும் குறிக்கொண்டு நோக்கத் தக்கது. மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களை