பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருக்குறள் 925. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் என்பது பொருளைக் கொடுத்துத் தன்னுடம்பை மறப்பிக்கத் தக்க கள்ளைக் கொண்டு குடிக்கிறவர்கள்* முன் செய்த தீவினை யாலே! செய்கிற தறியாமல் கள்ளைக் குடித்துக் கெட்டுப் போவார்கள் என்றவாறு. அறிவுடையார் கள்ளைக் குடியார்; அறிவில்லாதவர்கள் கள்ளுக் குடிப்ப ரென்ற வாறு. டு 926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் என்பது தூங்(கு)கிறவனும் செத்தவனும் கள்ளுக்குடித்தவனும் நஞ்சு தின்றவனும் இந்த நாலு பேரும் சரி யென்னலாம்”; சரியானாலும் துாங்(கு)கிறவனை யெழுப்பினால் எழுந்திருப்பான்; செத்தவன் சுவாச மில்லாமற் சும்மா’ கிடப்பான்; விஷந்தின்றவன் மணி மந்திர அவுடதங்களினாலே பிழைப்பான்; கள்ளுக்குடித்தவன் இவர்களைப் போலே சும்மா இராமல் நல்லோர்கள் பெரி யோர்கள் முதலான பேரை உபத்திரவம் பண்ணுவான்; ஆன படியினாலே சரியல்ல வென்பதாம். శొడా 927. உள்ளொற்றி யுள்ளுர் நகப்படுவ ரெஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் என்பது ஒருவரு மறியாமல் மறைந்திருந்து கள்ளைக் குடித்தாலும் பிறகு அந்தக் கள்ளினாலே அறிவு மயங்கினது கண்டு. இவன் கள்ளுக் குடித்தா னென்று உள்ளூரா ரெல்லாருஞ் சிரிப்பார்க ளென்ற வாறு. GT வரை செய்கிறதறியாமையைத் தனக்குக் காரணமாக வுடைத்து - அச்சுநூல். 1. எண்ணலாம், 2. சும்மாய், 3. அவிழ்தங்களினாலே - காகிதச்சுவடி