பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை : Տ ց 928. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததுஉ மாங்கே மிகும் என்பது மறைந்து நின்று கள்ளைக் குடித்து நான் கள்ளுக் குடிக்கிற தில்லை யென்று சொல்லித் தன்னுடைய ஆசார வொழுக்கங் களைச் சொல்லுகிறத்தை விட்டுவிடும்; அது பிறகு எல்லாரு மறிந்து வெகு குற்றங்களாக, அவனை யிகழ்வார்களென்றவாறு. | ننگے 929. களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குறித்தானைத் தித்துரீஇ யற்று. என்பது கள்ளுக் குடித்தவனைக் கள்ளுக் குடியாதவன் கள்ளுக்குடிக் கிறது ஆகாதென்று கிட்டாந்திரங்களைக் காட்டித் தெளிவிக் கிறது. தண்ணிர்க்குள்ளே மூழ்கிக் கிடக்கிறவனை விளக்கைப் பிடித்துக் கொண்டு தேடுகிறத்தோ டொக்குமென்றவாறு தண்ணிர்க்குள்ளே விளக்கு நில்லாதது போலக் கள்ளுக் குடிக்கிறவனுக்கு நீதி மார்க்கஞ் சொன்னா லவனுங் கெட்டுப் போ வா னென்பதாம்." சிக 93. கள்ளுண்ணாப் போழ்கிற் களித்தானைக் காணுங்கா லுண்ணான்கொ லுண்டதன் சோர்வு என்பது கள்ளுக் குடிக்கிறவன் ஒருத்தன், தான் கள்ளைக் குடியாத போது, பின்னை யொருவன் கள்ளைக் குடித்து மயங்கிக் கிடக் கிறவனைக் கண்டு, ந - ன் குடிக்கிற போதும் இப்படி அறிவு மயங்கிக் கிடப்பேன் என்று நினையாதே, அவன் மயக்கத்தையே பாத்துக் கொண்டிருப்பா னென்றவாறு. அறிவுடையவர்கள். கள்ளுண்டு மயங்கினவனைக் கண்டாகிலும் கள்ளுண்ணாமல் விடவேணு மென்பதாம். ΠΟ ஆக அதிகாரம் கூ0க க்குக்குறள் சுளா, ή) 1 . சொல் கிறதை 2. தேடுகிறதோ 3. பார்த்துக் *முதல் * வரை: அவன் மனத்துக் காரணம் செல்லாது - அச்சு நூல்