பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 திருக்குறள் இப்பால் 94. சூது என்பது, தர்மார்த்த காமங்களுக்கு விகா தமானது சூதாடுகிற தென்பதாம்.* 931. வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றது உந் துண்டிற் பொன் மீன் விழுங்கி யற்று என்பது சூதாடுகிறத்திலே கெட்டிக் காரனாய்த் தான் வெல்லத் தக்க வனானாலும், சூதினை விரும்ப வேண்டாம்; அதே னென்றால் சூதாடிப் பொருள் தேடிக் கொண்டு சுகமாயிருந்தவர்களில்லை: சூதினாலே பொருள் தேடின வர்கள் தூண்டிலிலே குத்தியிருக்கிற மீனைத் தண்ணிர்க்*குள்ளே யிருக்கிற மீன் விழுங்கிச் செத்தாற் போலே" கெட்டுப் போவார்களென்றவாறு. ஆ 932. ஒன்றெய்தி நூறிழக்கு ஞ் சூதர்க்கு முண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு என்பது சூதாடுகிறவன் ஒருக்கால்" ஒரு பொருளை வென்று, பிறகு அந்த ஆசையினாலே இன்னம் வெல்லுவோ மென்று நூறு பொருளை யிழந்து, தரித்திரனாய்க் கெட்டுப் போவன்; இது வல்லாமல் சூது அறமும் பொருளுமுண்டாய் வாழ்கிற நெறி யல்ல" என்றவாறு. 2– 933. உருளாய மோவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும் என்பது 1. காமியங்களுக்கு என்பது காகிதச் சுவடி 2. விகாதமான குதின தியல்பு-அச்சுநூல் 3. சூதாடுகிறதிலே 4. தண்ணியுக 5. செத்தாப் போலே - காகி சச் சுவடி 6. ஒருகால் 7. குதுபொருளால் அறமும் இன்பமும் எய்தி வாழ்கிற நெறி ஆகாது - அச்சு நூல்