பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 ੋਂ திருக்குறள் ஒருவன் முன் சாப்பிட்ட வஸ்த்துக்கள் செரித்ததைக் குறிப் பாலறிந்து பிறகு சாப்பிட்டால், அவனுக்கு மருந்தென்கிறது வேண்டா மென்றவாறு. குறிப்பா லறிகிறதாவது: சரீரந்தளருகிறது, பொறிகள் கலங்குகிறது, பசிமிகுதல் முதலாயின. பசி மிகுந்தபிறகு சாப்பிடு கிறவனுக்கு வியாதி வராதென்பது கருத்து. -- 943. அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றா னெடிதுய்க்கு மாறு என்பது முன் சாப்பிட்டது செரித்தபிறகு மட்டாகச் சாப்பிட்டால். அவன் சரீரம் வி பாதியில்லாமல் நெடுநாள் நிற்குமென்றவாறு பெறுதற் கருமை யாகிய மனுஷயாக்கையைப் பெற்றும், சீக்கிரமாய் விழுந்து போனால், தர்மம் வராது. நெடுநாள் நின் றால் தர்மார்த்தங்கள் தேடிக் கொள்ளலா மென்பது. சிட 944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து என்பது முன் சாப்பிட்டது. செரித்ததை யறிந்து, பிறகு பசிக்கிற போது உண்ணுகிறத்திலே தன் சரீரத்துக்கு இதமான பதார்த் தங்களைச் சாப்பிட வேணு மென்றவாறு. மிகப்பசித்தபிறகு சாப்பிட வேணு மென்றது, தான் கொண்ட விறுத’ நியமங்கள் தப்பாதே நடந்த பிறகு சாப்பிட வேணு மென்றவாறு. تعي 945. மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை யுயிர்க்கு என்பது வாதபித்தஞ் சிலேற்றுமம்' என்னப்பட்ட மூவகையும் அதி கப்படாத வஸ்த்துக்களைத் தன் மனது வேண்டிய படியல்லாமல் 1. உண்ணுகிறதிலே 2. விரத 3. சிலேத்துமம்