பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 U () திருக்குறள் 959. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல் என்பது நிலத்தினுடைய நன்மையை யதிலே முளைத்த முளை சாட்டும்: அப்படிப் போலக் குலத்தினுடைய நன்மையை அதிலே பிறந்த வர்களின் வாயிற் சொற்கள் காட்டும் என்றவாறு. முளைநன்றாய்ப் பெரிதா யிருந்தால் அவ்விடம் நல்ல நில மென்றறியலாம்; நல்ல வசனமும் நல்ல குணமும் உண்டா யிருந்தால், அவனை நல்ல குலவா னென்றறிய வேணுமென் ப.து. சிக 960. நலம் வேண்டி னானுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு என்பது ஒருவன் தனக்கு நன்மையை வேண்டினானா னால் பகை' பழிபாவங்களுக்குப் பயப்பட்டு நாணுடையனாயிருக்க வேணும்: நல்ல குலமுடையனாக வேண்டினால், தன்னை வணங்கினவர் களுக்குத் தானும் வணக்க முடையவனாயிருக்க வேணுமென்ற வாறு . நன்மையாவது, புகழ் புண்ணியங்களாம். t) ஆக அதிகாரம் கூ0கூ க்குக்குறள் கூளசு) இப்பால் 97. மானம் என்பது. எந்நாளும் தன்னுடைய நல்ல நடக்கையைக் கை விடாமலிருக்கிறதும் கர்ம வசத்தாலே தனக்கொரு குற்றம் வந்தால் பிராணனை விடுகிறது.மாம். இது நல்ல குலத்தார்க்கு வேண்டுவதாம். I. தின் - அச்சுநூல