பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 401 961 . இன்றி யமையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல் என்பது :த் ) செய்யாத காரியங்களைச் செய்தால் அழிவில்லாத பெரிய செல்வம் வருமானாலுந் தங்குடிக்குத் தாழ்வு வரப்பட்ட காரியங்களைச் செய்யவேண்டா மென்றவாறு. பிராணன் போறதாக வந்தா லிழிவான காரியங்களைச் செய்து பிழைக்கலாமென்று சொல்லுவர், வேதம் படித்த பேர். அதனை ஆகா தென்று மறுத்துப் பிராணன் போனாலும் இழிவான காரியஞ் செய்யலாகாது. சரீரம் அநித்தியம்: மானம் கெட்டால் அபகீர்த்தி போகா தென்பதாம். وي 62. சிரினு ரு சிரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் என்பது தனக்குக் கீர்த்தி வரவேணு மென்று செய்கிற விடத்தி லேயும், தம் குடிக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்யார், அபிமானத்தையும் புகழையும் நிறுத்துபவர்கள் என்றவாறு. த 963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு என்பது நல்ல குடியிலே பிறந்தவர்களுக்குப் பெரிய செல்வ முண்டான போது எல்லாருக்கும் வணங்கி நடந்து கொள்ள வேணும்; தரித்திரம் வந்த காலத்திலே வணங்காமல் விரத சீலங்களுடனே கூடியிருக்க வேணும் என்றவாறு. செல்வம் வந்த காலத்திலே வணங்காவிட்டால், கீழானவன் என்று சொல்லுவார்கள் :* தரித்திரம் வந்த காலத்திலே வணங்கினால் தாழ்வாக எண்ணுவார்கள். 1. செய்யத்தகாத 2. போகிறதாக 3. மறுக்கிறார் - அச்சுநூல் வரை : அச்சுநூலிர கண்டவை* لفة لرمى"