பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 405 எல்லாமனுஷருக்கும் பிறப்புச் சரியானாலும், அவரவர்கள் செய்கிற தொழில் வேற்றுமையினாலே சிறப்பாகிய தன்மைகள் சரியாகா என்றவாறு. செய்கிற தொழில்களாவன, நன்மையான காரியங்களைச் செய்கிறதும், தீமையான காரியங்களைச் செய்கிறது.மாம்". உ 973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர் என்பது செய்தற்கரிய காரியங்களைச் செய்யமாட்டாதவர் உயர்ந்த விடத்திலே யிருந்தாலும் பெரியவர்களாகார் செயற்கரிய விரத சீலாசார தானதர்மங்களைச் செய்யப்பட்ட பெரியோர் கள் தாழ்ந்த விடத்திலே யிருந்தாலும் சிறிய ராகா ரென்றவாறு. சிறியவர்கள் செல்வ முண்டாயிருந்தாலும் பெரியவராகார்: பெரியவர்கள் தரிததிர வான் களானாலுஞ் சிறியராகா ரென்ற வாறு. - МА 974. ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத் தான் கொண்டொழுகி லுண்டு என்பது கபடமில்லாத மனதையுடைய பூரீகள் பதிவிரதாபாவங் கெடாமல் காத்துக்கொண்டு நடக்கிறாப் போலே, பெருமைக் குணம் வேண்டினவர்களும் தன்னுடைய நீதிநெறி முறைமை கெடாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டிருக்கவேணு மென்ற வாறு. o பதிவிரதாபாவ முண்டான பூரீகள் பிரகாசமானாற் போல் நீதி நெறி முறைமை யுள்ளவர்களும் பெரியவர்களாவ ரென்ப தாம். 975 பெருமை யுடையவ ராற்றுவா ராற்றின் அருமை யுடைய செயல் என்பது – = - - - ------im l இச்சிறப்புரை அச்சுலில் இல்லை 2. செய்யும்