பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 8 திருக்குறள் 1012. ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு என்பது உண்ணுகிறது முடுக்கிறது முதலாக மற்று முண்டான தெல்லாம், மனுச சீவனுக் கெல்லாம் சரியானாலும், நல்லவர் களுக்கு அழகாவது நாண முடைய தென்றவாறு. -- 1013. ஊனைக் குறித்த வுயிரெல்லாம் நானென்னு நன்மை குறித்தது சால்பு என்பது எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலையாகக் கொண் டிருக்கும்; அதுபோல் நாண மென்னப்பட்ட நன்மையுடையதே நற்குணமென்றவாறு. சி. 1014. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்றோ பீடு நடை என்பது பெரியோர்களுக்கு நாணுடைமையே ஆபரணமாம்; அந்த ஆபரண மில்லாவிட்டால் அவருடைய பெரியதனம்" கண்டவர் களுக்குப் பிணியாமென்றவாறு. பொறுமை யில்லாதவன் பெரியதனம்’ பிணியாமென்பது? التي 1015, பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நானுக் குறைபதி யென்னு முலகு என்பது பிறருக்கு வருகிற பழியும் தமக்கு வருகிற பழியும் சரியாக வெண்ணி அதற்கு நாணுகிறவர்களை உலகத்தார் நாணமிருக்கு மிடம் என்று சொல்லு வார்களென்றவாறு. 1. ஒத்ததெனினும் 2. பெருமித நடை - அச்சு நூல் 3. நாணம் என்றிரு தல் தகும்.