பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை II 10.22. ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டின் நீள்வினையா ரீைளுங் குடி என்பது முயற்சியும் நிறைந்த வறிவும் என்று சொல்லப்பட்ட இரண் டையு முடையதாய் எந்நாளு மிடைவிடாதே செய்கிற கருமத் தாலே ஒருவன் குடி யுயரு மென்றவாறு. நிறைந்த வறிவாவது சுபாவமாயிருக்கிற அறிவுடனே பிறி தொன்றைக் கண்டறிகிறது.மாம். 2– 10.23. குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்பது ஒருவன் தன் குடியை யுயரச் செய்ய வேணு மென்று நினைத்து அதற் கேற்ற கருமங்களைச் செய்கிறவனுக்குத் தெய்வம் பிடவை யைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு சகாயமாய் வந்து முன்னிற்கு மென்ற வாறு. சிட 1024. சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் தாழா துளுற்று பவர்க்கு என்பது தன் குடியை யுயரச் செய்ய வேணு மென்று அதற்கேற்ற காரி யங்களைச் செய்யப் போனால், அந்தக் கருமம் தனக்குத்தானே முடியு மென்றவாறு. தெய்வந் துணையானால் சீக்கிரமாக எல்லாக் காரியமும் முடியு மென்பதாம். -F 1025. குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்று முலகு என்பது 1. புடைவை - ஆடை 2. 'சுற்றமாச்' என்பது பிறர் கொண்டப. டம்,