பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.24 திருக்குறள் இப்பால் 104. உழவு என்பது, வாணிகர்க்கும் வேளாளர்க்கு முரித்தாகிய* பயிரிடுகிற லட்சணஞ் சொல்லுகிறது.* 1031. சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழந்து முழவே தலை என்பது உழுது பயிரிடுகிறவ னுடம்பு வருத்தத்தைப் பார்த்து அந்தத் தொழிலைச் செய்யாமல் மற்றைத் தொழிலைச் செய்து திரிந்து பொருளெய்திய விடத்தும் உண்கிறத்துக்காக”ப் பயிரிடுகிறவ னண்டைக்கு வர வேணுமாகையினால் உழுது பயிரிடுகிறதே பெரிய தொழிலென்றவாறு. மற்றைத் தொழில்களெல்லா மதின் பிறகென்பதாம். தி 1032, உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து என்பது உழுகிற தொழிலைச் செய்ய மாட்டாமல் மற்றைத் தொழில் களைச் செய்து திரிகிறவர்களை யெல்லாந் தாங்குகிற3 படி யினாலே உழுகிறவர்கள் உலகத்துச் செனமாகிய தேரைத் தாங்குகிற* அச்சு ஆணியாமென்றவாறு. உ 1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் என்பது எல்லாரு முண்ணத் தக்கதாக உழுது பயிரிட்டுத் தாமும் உண்டு வாழ்கிறவர்களே வாழ்கிறவர்கள், மற்றவர்களெல்லாரும் பிறரைத் தொழுது அதனாலே தாம் உண்கிறத்துக்கு உழுதுண்கிறவர்களைப் பின் செல்லுவரென்றவாறு.

  • முதல் *வரை, உழுதற்றொழில்-அச்சுநூல் 1 பாத்து என்பது காகிதச் சுவடி 2. உண்கிறதற்காக 3 . தாங்கிற - காகிதச்சுவடி . உண்கிறதற்கு